அனைத்துலகப் பொருளியல் மன்றத்தில் உரையாற்றவிருக்கும் துணைப் பிரதமர்

அனைத்துலகப் பொருளியல் மன்றத்தில் உரையாற்றவிருக்கும் துணைப் பிரதமர்

1 mins read

சுவிட்­சர்­லாந்­தில் இருக்­கும் டாவோசில் இம்­மா­தம் நடை­பெ­ற­உள்ள உலகப் பொரு­ளி­யல் மன்றத்­தில் துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் உரையாற்ற இ­ருப்­ப­தாக வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரி­வித்­தது. சிங்கப்­பூ­ரின் பொரு­ளி­யல், சமு­தா­யக் கொள்கை­களுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்மன் சண்முகரத்னம், 'வேலைகள், திறன்களுக்­கான எதிர்­கா­லம்', 'ஓய்­வு­கா­லத் திட்­டங்களின் சவால்­கள்', 'அனைத்­து­லக நாணயம், நிதித் திட்டம்', 'ஆசியான்', 'அனைத்­து­லக உற்­பத்­தி­யின் எதிர்­கா­லம்' ஆகிய தலைப்­பு­களில் தொடர்­புடைய அமர்­வு­களில் உரை­யாற்ற இருப்­ப­தா­க­வும் வெளி­யு­றவு அமைச்சு குறிப்­பிட்­டது.