சொத்து முகவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்தது

சொத்து முகவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்தது

1 mins read
de3d252e-c107-47a1-b6ed-1e1ddbb21be2
-

வீட்டு விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. வீடுகள் கைமாறுவதும் குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆண்டில் 1,299 புதிய சொத்து முகவர்களே சொத்து விற்பனைத் துறையில் நுழைந்துள்ளனர். இது, 2014ஆம் ஆண்டின் 3,006 எண்ணிக்கையுடன் ஒப்பிடு கையில் பாதிக்கும் குறைவாகும். இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட சொத்து விற்பனையாளர்கள் அல்லது சொத்து முகவர்களின் மொத்த எண்ணிக்கை 29,262 என்று 'சிஇஏ' எனும் சொத்து முகவை மன்றத்தின் புள்ளி விவ ரங்கள் தெரிவிக்கின்றன.

2014ஆம் ஆண்டின் 31,783, கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்த 30,830 எண்ணிக்கை யுடன் ஒப்பிட்டால் இவ்வாண்டின் சொத்து முகவர்களின் எண் ணிக்கை குறைவு. இந்த நிலவரம் குறித்துப் பேசிய மன்றத்தின் உரிமம், திட்டப்பிரிவின் இயக்குநர் ஹெங் வூ கியட், "சொத்துச் சந்தையின் நில வரத்தை இது பிரதிபலிக்கிறது," என்றார். இந்தத் தொழிற்துறையில் ஏற் படும் செலவுகள் குறித்து சொத்து முகவர்கள் கவனமுடன் உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.