முதியவர்களை இலக்காகக் கொண்ட தொழில்நுட்ப, இணைய முகாம்

முதியவர்களை இலக்காகக் கொண்ட தொழில்நுட்ப, இணைய முகாம்

1 mins read
4b486cdb-a482-47d7-8ae4-9d03bcfada40
-

வடகிழக்கு வட்டாரத்தில் வசிக் கும் 450க்கு மேற்பட்ட முதிய வர்கள் தொழில்நுட்பம் தொடர் பான உதவிக் குறிப்புகளை 10 முதல் 15 வயது வரையிலான இணையத்தை நன்கு பயன்படுத்த தெரிந்த மாணவர்களிடம் நேற்று கற்றுக் கொண்டனர். ஆகப் பெரிய தலைமுறைகளுக் கிடையிலான முகாமுக்கு தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் (ஐடிஏ), வடகிழக்கு சமூக மேம் பாட்டு மன்றம், போஸ்பேங்க் வங்கி, 18 பள்ளிகள் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த முகாமை பிற்பகல் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ சீ ஹியன்.

இவ்வாண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த முகா மில் முதியவர்கள் மூன்று மணி நேர தகவல் தொழில்நுட்ப பயி லரங்குகளில் பங்கேற்கலாம். கீபோர்ட், மவுஸ் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது, இணை யத்தில் எவ்வாறு தகவல் திரட் டுவது போன்ற அடிப்படை கணி னித் திறன்கள் அந்தப் பயிலரங் கில் கற்றுத் தரப்படும்.

வைட் சேண்ட்ஸ் கடைத் தொகுதியில் நேற்று இலியாஸ் பார்க் தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதியவர்களுக்குத் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்த கற்றுக் கொடுக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்