கொட்டித்தீர்த்த மழையைப் பொருட்படுத்தாத பக்தி

கொட்டித்தீர்த்த மழையைப் பொருட்படுத்தாத பக்தி

1 mins read
14577318-441c-4691-9eeb-88580681f5c6
-
multi-img1 of 3

வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கு வெளியே அதிக நேரம் காத்திருக்க நேர்ந்ததாகப் புலம்பிய பக்தர்களுக்கு மேலும் சோதனையாக அமைந்தது நேற்று பிற்பகலில் பெய்த மழை. ஆனாலும் அந்த மழையைப் பொருட்படுத்தாது பொறுமையுடன் அவர்கள் காத்திருந்தனர். மேலும், அவர்கள் பக்திப் பாடல்களை இசைத்தபடி இருந்ததைக் கண்டபோது அவர்களின் பக்தி உணர்வை மழை இன்னும் அதிகப் படுத்தியது என்றே தெரிந்தது. அவர்களில் சிலரோ, வெயிலின் தாக்கத்தை மழை சற்றாவது குறைத்ததே என்று மகிழ்ச்சி அடைந்தனர்.

படங்கள்: திமத்தி டேவிட், த.கவி, காமராஜ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்