சிக்கா கிருமி: நடவடிக்கை குறித்து ஆலோசனை

சிக்கா கிருமி: நடவடிக்கை குறித்து ஆலோசனை

1 mins read
7676bdde-5d10-47d3-8e70-fd05a07a4224
-

சிங்கப்­­­பூ­­­ரில் சிக்கா கிருமித் தொற்று இதுவரை இல்லை என்ற போதிலும் அந்தக் கிருமி குறித்த நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்­­­கா­­­ணிக்­­­கப் போவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரி­­­வித்­­­துள்­­­ளது. "சிக்கா கிரு­­­மிக்கு எதிரான முன்னெச்செரிக்கை நட­­­வ­­­டிக்கை குறித்து சுகாதார அமைச்சு ஆலோ­­­சிக்­­­கிறது," என்று சுகாதார அமைச்­­­சின் பேச்­­­சா­­­ளர் 'தி ஸ்ட்­­­ரெய்ட்ஸ் டைம்­­­ஸி'­­­டம் கூறினார். டெங்­­­கியைப் பரப்­­­பும் ஏடிஸ் கொசுதான் சிக்கா கிரு­­­மியை­­­யும் பரப்­­­பு­­­கிறது. சிக்கா கிருமி தொற்­­­றினால் மித­­­மா­­­னது முதல் கடுமை­­­யான காய்ச்­­­சல் வரை வர­­­லாம். அத்­­­து­­­டன், சருமத் தடிப்பு, எலும்பு வலி போன்றவை­­­யும் ஏற்­­­ ப­­­டக்கூடும்.

சிக்கா கிருமி ஆயி­­­ரக்­­­க­­­ணக் கான பிறப்­­­பு­­­சார்ந்த குறைபாடு களுக்­­­குக் கார­­­ண­­­மா­­­கிறது என்று கண்ட­­­றி­­­யப்­­­பட்­­­டுள்­­­ளது. சிக்கா கிருமி தாக்­­­கப்­­­பட்ட தாய் ஈன்­­­றெ­­­டுக்­­­கும் குழந்தை மூளை பாதிப்பு ஏற்­­­படுத்­­­தக் கூடிய சிறிய தலை­­­யு­­­டன் பிறக்­­­கும். "தற்போது தென்­­­அ­­­மெ­­­ரிக்கா வில், குறிப்­­­பாக பிரே­­­சி­­­லில் சிக்கா கிரு­­­மி­­­யின் தாக்­­­கு­­­த­­­லும் தொற்றும் மிக அதி­­­க­­­மாக இருக்­­­கிறது.