நாடாளுமன்றம்: தேர்தலில் தோற்றிருந்தால் மாற்றுக்குரல் இல்லாமல் போயிருக்கும்

நாடாளுமன்றம்: தேர்தலில் தோற்றிருந்தால் மாற்றுக்குரல் இல்லாமல் போயிருக்கும்

1 mins read
a7d12e75-52cd-4fee-9c04-694e819c8fe2
-

பாட்டாளிக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற இரு வெற்றிகளும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்தவை. ஒரு வேளை தேர் தலில் தமது கட்சி தோற்றிருந்தால், நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரல் இல்லாமல் போயிருக்கும் என்று தொகுதியில்லா உறுப்பினர் திரு லியோன் பெரேரா (படம்) நேற்று அதிபரின் உரை குறித்த விவாதத்தின்போது தெரிவித்தார். அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி 50.96% எனும் குறுகிய விகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதேபோல், ஹவ் காங் தனித் தொகுதியிலும் அது குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அத்தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.

"ஒருவேளை இந்த இரு இடங்க ளிலும் பாட்டாளிக் கட்சி தோல்வி அடைந்திருந்தால், மக்கள் செயல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரிய அளவிலான அறுதி பெரும் பான்மை கிடைத்திருக்கும்," என் றார்.