புதிய கண்காணிப்புக் குழு

புதிய கண்காணிப்புக் குழு

1 mins read
e95a3f1b-2925-4c01-bd36-1d69a2695c81
-

மரினா பே அக்கம்பக்க போலிஸ் நிலையம் பூகிஸ்+ வணிக வளா கத்தில் நேற்று மத்திய வட்டார சில்லறை வர்த்தகர் கண்காணிப் புக் குழுவை அறிமுகம் செய்தது. ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள் துறை, சட்ட அமைச்சுகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் உறுப் பினருமான திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆசியான் வட்டாரத்தில் அண் மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கோள் காட்டிப் பேசிய திருவாட்டி ரஹாயு, சில்லறை வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தி, வாடிக்கையாளர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலிசுடன் கைகோக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாமிடம் (வலமிருந்து 2வது) விளக்குகிறார் துணை போலிஸ் உதவி ஆணையர் ஆர்தர் லா. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை