புகைப்படம் எடுத்தபோது ஒருவர் கீழே விழுந்த சம்பவம்; ஆணையம் விசாரணை

புகைப்படம் எடுத்தபோது ஒருவர் கீழே விழுந்த சம்பவம்; ஆணையம் விசாரணை

1 mins read
0c751377-f63a-463a-b0d5-e252f921f0de
-

போட் கீயில் தடுப்புக் கம்பி உடைந்த சம்பவத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒருவர், தடுப்புக் கம்பி உடைந்ததால் கீழே விழுந்து காயமடைந்தார். ஆணையத்தின் பேச்சாளர், தடுப்பு வேலி உடைந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படு வதாகத் தெரிவித்தார். "அந்த இடத்தை தற்காலிக மாக சுற்றி வளைத்துள்ளோம். அங்கு நிரந்தரமாக தடுப்புக் கம் பிகள் அமைக்கப்படும்," என்றார் அவர். சம்பவத்தன்று நாற்பது வயது களில் உள்ள அந்த நபர் அங்கு உள்ள ரிவர்வாக் தந்தூரில் மற்ற இருபது பேருடன் சேர்ந்து உண வருந்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவரும் மற்றவர் களும் உணவகத்துக்கு வெளியே புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர்.

ஒரு மேடான இடத்தில் தடுப்புக் கம்பி மீது அவர்கள் அனைவரும் பின்பக்கமாக சாய்ந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கீழே சுரங்கப் பாதை இருந்தது. இதில் தடுப்புக் கம்பி உடைந்ததால் கீழே விழுந்த அந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தடுப்பின் மேல் மேல் கம்பி காணப்படவில்லை. தற்போது அந்தப் பகுதியில் சிவப்பு, வெள்ளை நிற பட்டை கட்டப்பட்டு பொது மக்கள் நுழை யாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.