தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரானார் டேனியல் கோ

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரானார் டேனியல் கோ

1 mins read
dbcb778a-57a4-4574-83cc-705e15c1965b
-

பாட்­டா­ளிக் கட்­சியைச் சேர்ந்த டாக்டர் டேனியல் கோ தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தேர்தல் அதிகாரி நேற்று அறி­வித்­தார். கடந்த ஆண்டு நடை­பெற்ற பொதுத்­தேர்­த­லில் எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த ஆறு பேர் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெறா­விட்­டா­லும் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­கள் பெற்ற எதிர்க்­கட்சி வேட்­பா­ளர்­கள் மூவர் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்பி­னர்­க­ளா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர்.

பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகு­தி­யி­லி­ருந்து திரு­வாட்டி லீ லி லியன், ஃபெங்­ஷான் தனித் தொகு­தி­யி­லி­ருந்து திரு டெனிஸ் டான், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தி­யில் அங்கம் வகித்த திரு லியோன் பெரெரா ஆகியோர் அந்த மூவர். இருப்­பி­னும், திரு­வாட்டி லீ தாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை என்று அறி­வித்­தார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி திரு­வாட்டி லீ லி லியனின் தொகு­தி­ யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் இடம் காலியாக அறி­விக்­கப் ­பட்­டது. இதற்­கிடையே, டாக்டர் கோவை தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக முன்­மொ­ழிய முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக பாட்டாளிக் கட்சி நேற்று தேர்தல் அதி­கா­ரிக்­குத் தெரி­வித்­ததை தேர்தல் துறை உறுதிசெய்தது.