சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில் சிங்கப்பூரின் பல பேரங்காடிகளில் பொருட்களின் விலையில் கழிவு வழங்கப்பட்டாலும் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக 'பாம்ஃப்ரெட்' மீன் வகையின் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்து சில பகுதிகளில் ஒரு கிலோ மீனின் விலை $100 என விற்பனையாகிறது. இருந்தாலும் கடைகளில் பொருட்கள் வாங்குவோர் கூட்டம் குறையவில்லை. சைனா டவுன் வட்டாரத்தில் உள்ள ஈரச் சந்தையில் இந்த வகை மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு அதிகம் உயர்ந்த மீன்விலைகள்
1 mins read
-

