பொது வாடகை வீடுகளில் வசிப்போர் வீடு வாங்க கூடுதல் உதவிகள்

பொது வாடகை வீடுகளில் வசிப்போர் வீடு வாங்க கூடுதல் உதவிகள்

1 mins read
76c7c795-f07a-4311-a524-28ec01b7c6e9
-

பொது வாடகைக் குடி­யி­ருப்­பு­களில் வசித்த 500க்கும் மேற்­பட்­டோர் கடந்த ஆண்டு முதல்முறையாக வீடு வாங்­கி­ய­தாக வீடமைப்பு வாரியம் தெரி­வித்­துள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்­தில் 12,411 வீடுகள் விற்­பனைக்கு விடப்­பட்­டன. அதற்­குப் பிறகு வீடு வாங்கிய அத்­தகை­யோ­ரின் எண்­ணிக்கை பற்றிய விவரம் இன்னும் வெளி­யா­க­வில்லை. 2014ஆம் ஆண்டில் 750 பேர் இந்தப் பிரிவில் வீடு வாங்கி இருந்த­னர். 2011ஆம் ஆண்டு முதல் 3,000க்கும் அதி­க­மா­னோர் விருப்­பத்­திற்­கேற்ப கட்­டித்­த­ரப்­படும் வீடுகள் அல்லது எஞ்­சி­யுள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­களின் விற்பனை ஆகி­ய­வற்­றின் கீழ் வீடுகளை வாங்­கி­னர். ஓராண்­டுக்கு முன்பு இந்த எண்­ணிக்கை 2,500 ஆக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 600 குடும்பத்­தார் இந்தப் பிரிவில் வீடு வாங்­கு­வ­தாக வீடமைப்பு வளர்ச்­சிக் கழகம் தெரி­வித்­தது.

பொது வாடகைத் திட்­டத்­தின் கீழ், $1,500 வரை மாத வரு­மா­னம் உள்ள குடும்பங்கள் மிகவும் குறைவான வாடகை­யில் வீடு­களைப் பெறு­கின்றன. ஓரறை வீடு­களுக்­கான வாடகை $26; ஈரறை வீடு­களுக்கு $44. ஈராண்­டு­களுக்கு ஒரு முறை ஆய்­வுக்­குப் பிறகு வாடகை புதுப்­பிக்­கப்­படும். "நிலையான வரு­மா­னம் பெறும் குடும்பங்கள் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களை வாங்க ஊக்­கு­விக்­கப்­ படு­வர்," என கழகம் கூறிற்று.