விளக்குகளைத் திரும்பப் பெறுகிறது 'இக்கியா'

விளக்குகளைத் திரும்பப் பெறுகிறது 'இக்கியா'

1 mins read
a83179e3-8bf8-4b51-b0f9-f02e1f58b965
-

அறைகலன்கள் விற்கும் பெருநிறுவனமான 'இக்கியா', உட்கூரையில் பொருத்தப்படும் விளக்குகளில் மூன்று வகைகளைத் திரும்பப் பெற்று வருகிறது. அவ்விளக்குகளின் கண்ணாடி உறைகள் கழன்று கீழே விழுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அனைத்துலக அளவில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தபோதும் சிங்கப்பூரில் அத்தகைய சம்பவங்களோ, அதனால் காயம் விளைந்ததாகவோ எதுவும் புகார் இல்லை.

'ஹைபை', 'லாக்', 'ரின்னா' ஆகிய மூவகை விளக்குகளை தனது கடைகளில் கொடுத்து அதற்குரிய விலையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்காக அந்த விளக்குகளை வாங்கியதற்கான ரசீது அவசியமில்லை என்றும் இக்கியா அறிவித்துள்ளது. இவற்றில், 'ஹைபை', 'லாக்' ஆகிய விளக்குகள் மட்டும் சிங்கப்பூரில் விற்கப்பட்டு வந்தன. "சில சம்பவங்களில் மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டது. ஒரு வாடிக்கையாளருக்குத் தையல்களும் போடப்பட்டன," என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.