சன் டெக் சிட்டியில் உள்ள சுற்றுப்பாதையில் நேற்று மாலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது.' ஃபவுண்டன் ஆஃப் வெல்த்' கட்டடம் அருகே சாலை ஓரக் கல்லின் மீது ஏறியதாக அவ்வழியாகச் சென்ற ஒருவர் தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் சாலை ஓரம் ஏறியதோடு 'ஃபவுண்டன் ஆஃப் வெல்த்'தின் அடையாளப் பலகை மீது மோதியதாகவும் பீட்டர் வாங் எனப்படும் அவர் 'சேனல் நியூஸ் ஏஷியா'விடம் கூறினார். உடனடியாக சுமார் பத்துப் பேர் வரை அந்த இடத்திற்கு விரைந்து சென்று கார் ஓட்டியைத் தூக்க முயன்றதாகவும் பாதுகாவலர் உள்ளிட்ட பலரும் அவருக்கு உதவி செய்யச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்றது. மாலை 5.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் மேல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சன் டெக் சிட்டியில் கார் விபத்து
1 mins read
-