கைவிடப்படும் சைக்கிள்களால் ஏற்படும் சவால்

கைவிடப்படும் சைக்கிள்களால் ஏற்படும் சவால்

1 mins read
52536630-bdb2-4ec4-ae19-a80a40c430a2
-

கைவிடப்படும் சைக்கிள்கள் நாடெங்கும் காணப்படும் பிரச்சினையாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் கைவிடப்படும் சைக்கிள்கள் தொடர்பாக ஏறத்தாழ 300 நோட்டீஸ்கள் அனுப்பப் படுவதாக 938LIVE வானொலி நிலையத்திடம் நகராட்சி சேவைகள் அலுவலகம் கூறியது. கைவிடப்படும் சைக்கிள் களை அப்புறப்படுத்துவதில் நகர மன்றங்கள் போன்ற அமைப்புகளுக்கு ஓர் அளவுக்குப் பொறுப்புகள் உள்ளபோதிலும் இதற்குத் தீர்வு காண்பது சுலபமன்று என்று அலுவலகம் கூறியது. தெம்பனிஸ் நகர மன்றம் ஒவ்வொரு ஆறு மாதமும் கைவிடப்பட்டுள்ள சைக்கிள்களை அப்புறப் படுத்தும் திட்டத்தை நடைமுறையில் கொண்டுள்ளது. அப்புறப் படுத்துவதற்கு முன்பு சைக்கிள்களை அப்புறப் படுத்தக் கோரி அறிவிப்பு களை அது வெளியிடும்.