இணைய மோசடிச் சம்பவங்கள் பெருகின

இணைய மோசடிச் சம்பவங்கள் பெருகின

2 mins read
860ba489-ff0d-4a65-ae8e-69417017edba
-

சிங்கப்பூரின் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு கூடியதாக போலிஸ் தெரிவித்து உள்ளது. குற்றங்கள் கூடியதற்கு இணையக் குற்றங்களின் அதி கரிப்பு முக்கிய காரணம் என்று போலிஸ் படை நேற்று வெளியிட்ட வருடாந்திர குற்ற புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முழுவதும் 33,608 குற்றங்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 32,315ஆக இருந்தது. வர்த்தகக் குற்றங்களின் எண் ணிக்கை 47 விழுக்காடு கூடியது. இணைய வர்த்தகம், பாலியல் சேவை வியாபாரம், இணைய காதல் ஆகியவற்றில் நிகழ்ந்த மோசடிச் சம்பவங்கள் 95% அதிகரித்து கடந்த ஆண்டு 3,759ஆக இருந் தது. அதற்கு முந்திய 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,929ஆக இருந்தது.

பாலியல் தொழில் மோசடி பெரிய அளவில் அதிகரித்து காணப்பட்டது. 2014ஆம் ஆண் டில் வெறும் அவ்வகை மோசடிச் சம்பவங்கள் 66 நிகழ்ந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த எண் ணிக்கை 1,203க்கு எகிறியது. சமூக ஊடகங்கள் வழி ஆண் களைத் தொடர்பு கொள்ளும் கவர்ச்சிகர பெண்கள் இணையம் வழியாக பரிசுப் பொருட்களை வாங்கினால் அதற்கு ஈடாக பாலி யல் சேவைகள் வழங்கப்படும் என வலிய வந்து கேட்பார்கள். இது புது மாதிரியாக இருக் கிறதே என்று பலரும் இந்த மோசடியில் சிக்கி ஏமாந்துள்ளனர். அதன்மூலம் $2.9 மில்லியன் மோசடி நடைபெற்றுள்ளது. ஆக அதிமாக இழக்கப்பட்ட தொகை $74,000. பெரும்பாலும் வெளிநாட்டு கும் பல்களால் இந்த பாலியல் மோசடி நடத்தப்பட்டதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பெரும் பாலும் 20க்கும் 39க்கும் இடைப் பட்ட வயதினர் என்றும் போலிசார் கூறினர்.