டாக்டர் இங்: நாட்டின் அமைதியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது

டாக்டர் இங்: நாட்டின் அமைதியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது

1 mins read
d7529ddb-67a9-4404-9329-a5da82194175
-

பாது­காப்பு ஆபத்­து­கள் உச்­சத்­தில் இருக்­கும் இன்றைய காலத்­தில் அமைதி நிலையை கிள்ளுக்கீரையாக எடுத்­துக்­கொள்­ளக் கூடாது என்று தற்­காப்பு அமைச்­சர் டாக்டர் இங் எங் ஹென் எச்­ச­ரித்­துள்­ளார். 52வது மியூனிக் பாது­காப்பு மாநாட்­டில் பங்­கேற்ற மியூனிக் சென்­றி­ருக்­கும் டாக்டர் இங் இதனை தமது ஃபேஸ்­புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டி­ருந்தார். "கிரைமியா, உக்ரேன் நாடுகளி லுள்ள நெருக்­க­டி­நிலை, பிரான்­சில் நடந்த பயங்க­ர­வாதத் தாக்­கு­தல்­கள், ஐரோப்­பிய நாடு ­களில் வந்­தி­றங்­கும் ஏரா­ள­மான அக­தி­கள் போன்ற பிரச்­சினை­களுக்கு இங்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றோம்.

"இந்தக் கூட்­டங்களில் பங்­கேற்­கும்போது, சிங்கப்­பூர் தனது அமைதியை சர்­வ­சா­தா­ர­ண­மான ஒன்றாக எடுத்­துக்கொள்­ளவோ, பாது­காப்பை குறைத்­து­வி­டவோ கூடாது என்பதே மீண்டும் உறு­தி ­யா­கிறது. ஐரோப்­பாவைப் போலன்றி, நமது பாது­காப்­புக்கு நம்மை மட்டுமே நாம் நம்­பி­யுள் ளோம். இதை மறந்­து­விட்­டால் நாம் சிங்கப்­பூரை இழக்­கும் ஆபத்தை எதிர்­கொள்ள வேண் டும்," என்று அமைச்சர் கூறினார். முன்பு பனிப்­போர் முடி­வுக்கு வந்ததைத் தொடர்ந்து "அமைதி ஈவை" அனு­ப­விப்­ப­தில் இந்த மாநாடு கவனம் செலுத்­தி­யது. ஆனால், தற்போது நிலைமை அப்­ப­டி­யில்லை. முன்பு புதிய, அமை­தி­ யான நிலைமைக்கு ஏற்ப கிட்­டத்­தட்ட எல்லா ஐரோப்­பிய நாடு ­களின் ராணு­வங்களும் தங்க­ளது வலுவைக் குறைப்­ப­தில் கவனம் செலுத்­தின. வடஅட்­லாண்­டிக் ஒப்­பந்த அமைப்பைக் குறிப்பிட்டு, நேட்டோ தேவையா என்ற கேள்­வி கூடஎழுந்தது என்றார் அமைச்சர்.