சான் ­பி­ரான்­சிஸ்கோவில் சிங்கப்பூரர்களைச் சந்தித்த பிரதமர்

சான் ­பி­ரான்­சிஸ்கோவில் சிங்கப்பூரர்களைச் சந்தித்த பிரதமர்

1 mins read
379c88f6-e7f2-4233-88cc-3bfbcb75f94b
-

சான்­ பி­ரான்­சிஸ்கோ சென்ற பிர­த­மர் லீ சியன் லூங் சனிக்­கிழமை அன்று அங்­குள்ள சிங்கப்­பூர் தொழில்­நுட்ப நிபு­ணர்­களு­டன் கலந்­துரை­யா­டல் நடத்­தி­ய­து­டன் சீனப் புத்­தாண்டு ஒன்­று­கூ­ட­லி­லும் பங்­கேற்­றார். அத்­து­டன் விவ­சா­யி­கள் சந்தையை­யும் சுற்றிப் பார்த்­தார். அமெ­ரிக்­கப் பயணம் குறித்து தமது ஃபேஸ்­புக்­கில் அன்றா­டம் பதி­வேற்றி வரும் பிர­த­மர், சிங் கப்­பூர் தொழில்­நுட்ப நிபு­ணர்­களு­டன் இது தமது முதல் கலந்­துரை­யா­டல் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"சிலர் நிலை­பெற்ற நிறு­வ­னங்களில் பணி­யாற்­று­கின்ற­னர். சிலர் சொந்த நிறு­வ­னங்களை வைத்­துள்­ள­னர். சிங்கப்­பூ­ரில் நடப்­பதை அறிந்­து­கொள்­வ­தில் அவர்­கள் ஆர்­வ­மாக உள்­ள­னர். எனவே அவர்­களு­டன் நமது அறி­வார்ந்த­தேச திட்­டத்­திற்­கான திட்­டங்களை­யும் இலக்­கு­களை­யும் பகிர்ந்­து­கொண்­டேன்," என்ற திரு லீ கூறினார். சீனப் புத்­தாண்டு ஒன்­று­கூ­ட­லில் மாண­வர்­கள், வேலை செய்யும் நிபு­ணர்­கள், குடும்பங்கள் என கிட்­டத்­தட்ட 250 பேரைச் சந்­தித்­தார்.