தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பேருந்து நிறுவனத்தின் கவர்ச்சிகர சம்பள அறிவிப்பு

1 mins read
99c90867-3fd0-4991-a8fa-aac7fd352584
-

சிங்கப்பூரின் புதிய பேருந்து நிறுவனமான Go-Ahead தனது பேருந்து ஓட்டுநர்களுக்கு தொடக்க மாதச் சம்பளமாக $1,865 வழங்கு வதாக அறிவித்துள்ளது. லண்டன் நகரைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம் நேற்று தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேருந்து ஓட்டுநர்களுக் கான வேலை நிபந்தனைகளை அறிவித்தது.

அனுபவம் வாய்ந்த பேருந்து ஓட்டுநர்கள் தனது நிறுவனத்தில் வந்து சேர்ந்தால் தொடக்க போன சாக 2,000 வெள்ளி வழங்கப்படும் என்றும் அனைத்து புதிய ஊழியர் களுக்கும் ஒரே தடவையிலான தக்கவைப்பு போனசாக 1,000 வெள்ளி தரப்படும் என்றும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் ஓட்டுநர்களுக்கு இந்த நிறுவனம் அறிவித்துள்ள அடிப்படை சம்பளம் மற்றொரு புதிய போக்குவரத்து நிறுவனமான டவர் டிரான்சிட்டை ஒத்துள்ளது.