வரும் 28ஆம் தேதி 'கார் இல்லா ஞாயிறு'

வரும் 28ஆம் தேதி 'கார் இல்லா ஞாயிறு'

1 mins read
3f81d6a8-1587-4541-ae88-2a0eb2ce4fbc
-

இம்மாதம் 28ஆம் தேதி மத்திய வர்த்தக வட்டாரம், குடிமை வட் டாரத்தின் சில பகுதிகளில் சிங்கப்பூரின் முதல் 'கார் இல்லா ஞாயிறு' அனுசரிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். இம்மாதம் முதல் வரும் ஜூலை மாதம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த முன்னோடி முயற்சி இடம்பெறும். "காலை 7 மணி முதல் 9 மணி வரை செயிண்ட் ஆண்ட் ரூஸ் ரோடு, ஸ்டாம்ஃபர்ட் ரோடு, கன்னாட் டிரைவ், ஃபுல்லர்ட்டன் ரோடு ஆகிய சாலைகள் வாகனப் போக்குவரத்து மூடப்படும். சைக் கிளோட்டம், மெதுவோட்டம், நடைப்பயிற்சிக்கு ஏதுவாக ஷென்டன் வே, ராபின்சன் ரோடு ஆகிய சாலைகளில் ஒரு பகுதி மூடப்படும்," என்று அமைச்சர் வோங் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.