எண்ணெய்க் கசிவால் போக்குவரத்து பாதிப்பு

1 mins read
1846281d-6b69-4fc8-8c77-1c8a8ac007a9
-

ஆடம் ரோட்டை நோக்கிச் செல் லும் லோர்னி ரோட்டில் நேற்றுக் காலை எண்ணெய்க் கசிவு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் பழுதாகி நின்ற வாகனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக நேற்றுக் காலை 7.45 மணியளவில் நிலப் போக்கு வரத்து ஆணையம் டுவிட்டர் சமூக ஊடகம் வழியாகத் தெரி வித்தது. இதனால், சாலையின் இடது ஓரத் தடம் தற்காலிகமாக போக்கு வரத்திற்கு மூடப்பட்டது. இதை அடுத்து, மத்திய விரைவுச்சாலை அல்லது அப்பர் சிராங்கூன் ரோட்டை மாற்று வழியாகப் பயன் படுத்தும்படி வாகனமோட்டிகளை ஆணையம் அறிவுறுத்தியது. எண்ணெய்க் கசிவால் 74, 93, 157, 165 ஆகிய பேருந்துச் சேவைகள் தாம்சன், லோர்னி, ஆடம் ரோடுகளிலுள்ள எட்டுப் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க் கும் என்று காலை 8.37 மணி அளவில் எஸ்பிஎஸ் டிரான்சிட் டுவிட்டர் மூலம் அறிவித்தது.

சாலையில் பழுதடைந்து நின்றிருந்த வாகனத்திலிருந்து எண்ணெய் கசிந்ததால் லோர்னி சாலையின் இடது ஓரத் தடம் போக்குவரத்திற்கு மூடப்பட்டது. சாலையின் இரு பகுதிகளில் கசிந்திருந்த எண்ணெய் முழுமையாக அகற்றப்பட்டு, மீண்டும் மேற்பூச்சு போடப்பட்டது. இதையடுத்து, பிற்பகல் 12.30 மணிக்கு ஒரு பகுதியும் 4.30 மணிக்கு இன்னொரு பகுதியும் வாகனப் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்