டெங்கி சம்பவங்கள் குறைந்தன

டெங்கி சம்பவங்கள் குறைந்தன

1 mins read
0bd11e8f-4fed-45c7-8554-e3fac6f20c0f
-

பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மொத்தம் 513 டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்று தேசிய சுற்றுப்புற வாரியத் தின் அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது, இதற்கு முன்னைய வாரத்துடன் ஒப்பிடு கையில் 80 சம்பவங்கள் குறைவு. பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிந்த வாரத்திற்கு முன்பு டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. அப்போது டெங்கி சம்பவங்கள் 40 விழுக்காடு கூடியதால் இவ் வாண்டில் டெங்கி மேலும் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சென்ற பிப்ரவரி 28ஆம் தேதி ஞாயிறுக்கிழமை முதல் திங்கட் கிழமை பிற்பகல் 3.30 மணி வரையில் மேலும் 73 டெங்கி சம்பவங்கள் பதிவானதாக வாரி யம் குறிப்பிட்டது. சென்ற ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 4,548 பேர் டெங்கி வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் இறந்துவிட்டனர். தோ பாயோவில் வசித்த 67 வயது சிங்கப்பூரர், மார்சிலிங் ரைசில் வசித்த 47 வயது நபர் ஆகிய இருவரும் டெங்கியால் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் டெங்கி சம்பவங்கள் 30,000 அளவுக்கு உயரக்கூடும் என்று ஏற்கெனவே வாரியம் எச்சரித்துள்ளது.