வங்கி அட்டைகள் மூலம் பேருந்து, ரயில் கட்டணம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து, ரயில் கட்டணம்

2 mins read
56e612e0-061e-41c4-8e43-7fa9445e69a0
-

எதிர்காலத்தில் பேருந்து, ரயில் பயணங்களில் கட்டணம் செலுத்து வதற்கு வங்கியின் கடன், கணக்குப் பற்று அட்டைகளை பயணிகள் பயன்படுத்த முடியும். இதற்கான சாத்தியம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது. கட்டணம் செலுத்துவதற்கு புதிய வாய்ப்புகளைக் கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. புதிய வசதியினால் ரயில் நிலையங்களில் உள்ள கட்டண சாவடிகளைக் கடந்து செல்லும் போது பயணிகள் தங்களுடைய வங்கி அட்டைகளைப் பயன் படுத்தலாம். அதே போல பேருந்து களிலும் வாசிப்பானில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்த முடியும்.

இதனால் அட்டைகளில் முன் கூட்டியே பணம் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது. பயணிகள் பயணத்துக்கான கட்டணங்களை வங்கி அட்டை மூலமாகவே செலுத்துவார்கள். இதற்கிடையே ஒருவரின் கணக்கை அடிப்படையாகக் கொண்ட கட்டண முறை குறித்து ஆராய ஒப்பந்த குத்தகையை ஆணையம் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றால் உலகில் இத் தகைய கட்டண முறையை புகுத் திய ஒரு சில நகரங்களில் சிங்கப் பூரும் ஒன்றாகும்' என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாகி சிவ் மென்லியோங் சொன்னார்.

அட்டைகளில் கட்டணத் தொகையை நிரப்ப வேண்டிய தேவையில்லாமல் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் வாய்ப்பு களை பயணிகள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2012ல் இதே போன்ற கட்டண முறை லண்டனில் அமலாக்கப்பட்டது. இது, பின்னர் 2014ல் லண்டன் ரயில் பயணங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.