வாடகை வீடு கோரி­ய­வர்­களில் 50 விழுக்­காட்­டி­னர் வீடு பெற்­ற­னர்

வாடகை வீடு கோரி­ய­வர்­களில் 50 விழுக்­காட்­டி­னர் வீடு பெற்­ற­னர்

1 mins read
d1e1ab10-6d87-45ed-9326-a3bd7910257c
-

2013 முதல் 2015 வரை வீடு இல்லாத 543 தனி­ந­பர்­களுக்­கும் 374 குடும்பங்களுக்­கும் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆத­ர­வும் தங்­கு­வதற்கு இடமும் அளித்­துள்­ளது என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்­சின் நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் முகம்­மது ஃபைசால் இப்­ரா­ஹிம் நாடா­ளு­மன்றத்­தில் தெரி­வித்­தார். இவர்­களில் சிலர் கடன் அல்லது மண­மு­றிவு கார­ண­மா­கத் தங்கள் வீடுகளை விற்கும் சூழ்நிலை ஏற்­பட்­டது.

சில­ருக்கு குடும்பத்­தி­ன­ரு­டன் ஏற்­பட்ட விரிசல் போன்ற காரணங்களால் தங்கள் வீடு­களில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்­பட்­டது என்று அவர் கூறினார். அமைச்­சின் உதவி பெற்­ற­வர்­களில் வாடகை வீடு கோரி விண்­ணப்­பம் செய்­த­வர்­களில் பாதி பேருக்கு வாடகை வீடுகள் கிடைத்­தன. விண்­ணப்­பத்­தில் தோல்வி அடைந்த­வர்­களுக்கு வீடு வாங்கும் தகுதி இருந்த­தா­க­வும் குடும்ப ஆதரவு போன்ற தெரி­வு­கள் இருந்த­தா­க­வும் திரு ஃபைசால் தெரி­வித்­தார்.