பயங்கரவாத தாக்குதல் மாதிரிப் பயிற்சி

பயங்கரவாத தாக்குதல் மாதிரிப் பயிற்சி

1 mins read
77cbde1f-de45-4f60-a11a-fa796ede5b6a
-

முக்கிய நகர்ப் பகுதிகளில் குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழும்போது அதைத் திறம்பட எப்படி சமாளிப்பது என்பதை மக்களுக்குப் போதிக்க நேற்று கேலாங் சிராய் பகுதியில் பாவனைக் குண்டுவெடிப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கேலாங் சிராய் அவசரகால ஈடுபாட்டுக் குழு, கண்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பயங்கரவாதச் செயல் நிகழ்ந்ததன் விளைவாக தீ மூளும்போது அதை அணைக்கும் விதத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதேபோல் குண்டுவெடிப்பு காரணமாக காயம்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதெல்லாம் தத்ரூபமாக பயிற்சியில் இடம்பெற்றன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்