ஐசிஏயின் புதிய கைபேசி செயலி

ஐசிஏயின் புதிய கைபேசி செயலி

1 mins read
098f9189-c1ba-414d-b992-a2d4f6d6324d
-

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) நேற்றுப் புதிய கைபேசி செயலி ஒன்றை வெளி யிட்டது. இந்தப் புதிய செயலி தற்போது இணையத் தளத்தின் மூலம் செய்யப்படும் முன்பதிவுக்கு ஈடாக செயல்படும். eAPPT@ICA என்ற செயலி மூலம் கைபேசி வழியாக முன்பதிவு செய்யலாம், செய்யப்பட்ட முன் பதிவுகளில் மாற்றம் செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் தெரிவித்தது. குழப்பம் இல்லாமல் எளிய முறையில் வடிவமைக்கப்பட்ட செயலியில் முன்பதிவு குறித்து முன்னரே நினைவுபடுத்தும் வசதி களும் இடம்பெற்றுள்ளன என்றும் ஆணையம் குறிப்பிட்டது.