வீவக, தனியார் வீடுகளின் வாடகை பிப்ரவரியில் இறங்குமுகம்

வீவக, தனியார் வீடுகளின் வாடகை பிப்ரவரியில் இறங்குமுகம்

1 mins read
0faaa453-fe10-431a-80b3-f35733ca469d
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக), தனியார் வீடுகளின் வாடகை தொடர்ந்து பிப்ரவரி மாதமும் இறங்குமுகமாக இருந்தது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வீவக வீடுகளின் வாடகை 0.9% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத வீவக வீட்டு வாடகை 3.7% குறைந்துள்ளது. வீவக வாடகை வீடுகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தைவிட கடந்த மாதம் 20.1% சரிந்தது. ஜனவரி மாதம் 1,715 வீடுகள் வாடைக்கு எடுக்கப்பட்டன. இதுவே கடந்த மாதம் 1,371 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. முக்கிய மத்திய வட்டாரத்தில் தனியார் வீடுகளின் வாடகை 1.3% அதிகரித்தது. மத்திய வட்டாரத்தின் மற்ற பகுதிகளிலும், அதனை ஒட்டிய வட்டாரங்களில் வாடகை முறையே 1.8%, 1.3% குறைந்தது என எஸ்ஆர்எக்ஸ் சொத்து நிறுவனம் தெரிவித்தது.