உலகிலேயே அதிக வாழ்க்கைச் செலவினம் உள்ள நாடு சிங்கப்பூர்

உலகிலேயே அதிக வாழ்க்கைச் செலவினம் உள்ள நாடு சிங்கப்பூர்

1 mins read
63843eea-699e-408e-b5ff-5ccc18248124
-

உல­கி­லேயே வாழ்க்கைச் செல­வி­னம் அதி­க­முள்ள நாடாக, 116 புள்­ளி­களு­டன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்­பூர் விளங்­கி ­வ­ரு­கிறது. இதை­ 'இஐயூ' எனப்­படும் பொரு­ளி­யல் புலனாய்­வுப் பிரிவு தெரி­விக்­கிறது. இரண்டாம் நிலையில் 114 புள்­ளி­களு­டன் ஸ`ரிக், ஹாங்காங் ஆகிய நாடுகள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன. ஆண்­டுக்கு இரு முறை கருத்­தாய்வு செய்து 160 பொருட்­கள், சேவை­களின் 400 தனிப்­பட்ட விலை களை ஒப்புநோக்கி 'இஐயூ' நிறு­வ­னம் உல­க ­ளா­விய வாழ்க்கைச் செலவின அறிக்கையைத் தயா­ரிக்­கிறது.

உணவு, பானம், உடைகள், குடும்பத்­துக்­குத் தேவையான பொருட்­கள், வாடகை, போக்­கு­வ­ரத்து, பய­னீட்­டுக் கட்­ட­ணம், தனியார் பள்­ளி­கள், பணிப்­பெண் உதவி, பொழு­து­போக்­குச் செல­வி­னங்கள் ஆகியன ஆய்வில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டன. சிங்கப்­பூ­ரில் கார்களை வாங்கிப் பரா­ம­ரிப்­பது, போக்­கு­வ­ரத்து, பய­னீட்­டுக் கட்­ட­ணம் ஆகியன கூடு­த­லாக இருந்தா­லும் அடிப்­படை மளிகைப் பொருட்­களின் விலை ஒப்பிடக்கூடிய தாகவே உள்ளது.