தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிட மரணங்கள் அதிகரிப்பு

2 mins read
af88c2aa-3afb-4e03-a3c4-1d663cda24fb
-

வேலை­யி­டங்களில் நேர்ந்த விபத்­துக்­க­ளால் காயமடைந்­தோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு குறைந்­தி­ருந்தா­லும் வேலையிட மர­ணங்கள் உயர்ந்­துள்­ளன. 2014ஆம் ஆண்டு வேலையிட மர­ணங்கள் 60ஆக இருந்தன. ஆனால் சென்ற ஆண்டு அந்த எண்­ணிக்கை 66ஆக உயந்த­தாக வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரக் கழ­கத்­தின் ஆண்ட­றிக்கை தெரி ­விக்­கிறது. சென்ற ஆண்டு வேலை­யி­டத்­தில் காய­முற்­றோர் எண்­ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை­வி­டக் குறைந்­துள்­ளது. சென்ற ஆண்டு 12,285 பேர் வேலை­யி­டத்­தில் காய­முற்­ற­தா­க­வும் அதற்கு முந்தைய ஆண்டில் அந்த எண்­ணிக்கை 13,535ஆக இருந்த­தா­க­வும் அறிக்கை குறிப்­பிடுகிறது.

சென்ற ஆண்டு கட்­டு­மா­னத் துறையில் ஆக அதி­க­மாக 27 மர­ணங்களும் போக்­கு­வ­ரத்­துத் துறையில் 15, உற்­பத்­தித் துறையில் 6 மர­ணங்களும் நிகழ்ந்­துள்­ளன. மொத்தம் 23 ஊழி­யர்­கள் கீழே விழுந்து மாண்­டு­போ­யி­னர். போக்­கு­வ­ரத்து விபத்­து­க­ளால் 10 பேரும் நகரும் அல்லது விழும் பொருட்­க­ளால் 10 பேரும் மர­ண­முற்­ற­னர். கடந்த ஆண்டின் பிற்­பா­தி­யில் வேலையிட மரணங் கள் அதி­க­ரித்­த­து­டன் இவ்­வாண்டு ஜனவரியில் 9 வேலையிட மர­ணங்கள் நிகழ்ந்­துள்­ளன. "வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத்­துக்கு சற்றுக் கூடு­த­லான கவ­னிப்பு அளித்­தி­ருந்தால் இந்த மர­ணங்களை எளி­தா­கத் தவிர்த்­தி­ருக்க முடியும் என நேற்று நடை ­பெற்ற வேலை­யி­டப் பாது­காப்­புக் கருத்­த­ரங்­கில் மனி­த­வள துணை அமைச்­சர் சேம் டான் கூறினார்.

வேலை­யி­ட மேற்பார்வையா­ளர்­ களுக்குப் பாது­காப்­புத் தக­வல் ­களை நினை­வு­படுத்­தக்­கூ­டிய துண்டுப் பிரசுரங்களை வேலை­யி­டப் பாதுகாப்பு, சுகா­தா­ரக் கழகம் வழங்­கி­யுள்­ளது. வேலை­யி­டங் களில் 'நடமாடும் பாது­காப்பு மையங்கள்', நிறு­வ­னங்கள் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்பை நடை­ முறைப்­படுத்த உதவும் திட்டம் ஆகி­யவை­யும் செயல்­படுத்­தப்­ப­ட உள்­ளன. இந்தப் புதிய நட­வ­டிக்கை­கள் இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் அறி­மு­கம் காணவுள்­ள­தாக திரு டான் கூறினார்.