டோ டக் அவென்யூவில் நேற்று முன்தினம் பிற்பகலில் பொதுப் பேருந்தில் சிக்கி 29 வயது இந்தோனீசியப் பெண் மரணம் அடைந்தார். பிற்பகல் 12.30 மணிக்கு குமாரி வின்னி பிராடிவி என்ற அந்தப் பெண் மதிய உணவு சாப்பிடச் சென்றபோது இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக 50 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து வலது பக்கம் வளையும்போது குமாரி பிராடிவி பேருந்தில் சிக்கியதாக நம்பப்படுகிறது. சம்பவம் அறிந்து பிராடிவியின் தாயார் இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.
பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்
1 mins read

