ஜெம் கடைத்தொகுதியில் நீர்க்கசிவு

ஜெம் கடைத்தொகுதியில் நீர்க்கசிவு

1 mins read
6b3072ae-252f-4b93-9296-2a4df91bd5ea
-

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஜெம் கடைத் தொகுதியில் மேலும் ஒரு நீர்க்கசிவு ஏற்பட்டது. வெள்ளிக் கிழமை இரவு 8 மணியளவில் அக்கடைத் தொகுதியின் மூன்றா வது தளத்தில் உள்ள 'இண் டோபாக்ஸ்' உணவகத்தினுள் நீர்க்கசிவு ஏற்பட்டதாக கான் வெய் என், 35, என்பவர் ஊட கங்களிடம் தெரிவித்தார். அந்த உணவகத்தின் தளம் முழுவதும் நீர் காணப்பட்டதாகவும் சமையலறைக் கழிவைப் போன்ற நாற்றம் அதிலிருந்து வந்ததாகவும் அவர் சொன்னார்.

இரவு 8.30 மணியளவில் மற்ற இடங்களுக்கும் அந்த நீர் பரவியதால் இரண்டாம், மூன்றாம் தளங்களை இணைக்கும் மின் படிக்கட்டின் இயக்கம் நிறுத்தப் பட்டதாக திரு கான் கூறினார். நீர் ஒழுக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் கடைத் தொகுதி பேச்சாளர் கூறினார். கடந்த 2013ஆம் ஆண்டு இந்தக் கடைத் தொகுதி திறக்கப்பட் டது முதல் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.