டான் சுவான் ஜின்: முதியோரை கூடுதலாக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இலக்கு

டான் சுவான் ஜின்: முதியோரை கூடுதலாக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இலக்கு

1 mins read
506a01e0-7c2c-42d1-8a9e-b61cffa53376
-

தனியாக வாழும், எளிதில் மற்­ற­வர்­ க­ளால் பயன்­படுத்­தக்­கூ­டிய நிலையில் இருக்­கும் மூத்த குடி­மக்­களை இந்த ஆண்டு இறு­திக்­குள் சமூக நட­வ­டிக்கை­களில் அதி­க­மாக ஈடுபடச் செய்வது சமுதாய குடும்ப அமைச்­சின் இலக்கு என்று தெரி­வித்­தார் அமைச்­சர் டான் சுவான் ஜின். கெம்பங்கான் - சை சீ தொகு­தி­யில் நேற்றுக் காலை நடை­பெற்ற சமூக சுகாதார விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்­சர், சமூக நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­கா­த­வர்­களைப் பற்றித் தாம் கவலைப்­படு­வ­ தா­கத் தெரி­வித்­தார். உடல் ஆரோக்­கி­யத்­தின் பல்வேறு பரி­மா­ணங்கள் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தும் நோக்கில் அந்த சுகாதார விழா நடத்­தப்­பட்­டது.

"சில நேரங்களில் இந்த நட­வ­டிக்கை­களில் அதே நபர்­கள் பங்­கேற்பதைக் காணலாம். மற்ற மூத்த குடி­மக்­களும் இவற்­றில் பங்­கேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்றார் அவர். சமூக நட­வ­டிக்கை­களில் பங்­கேற்­கா­மல், தனித்து வாழ்­ப­வர்­களை அடை­யா­ளம் கண்டு, அவர்­களு­டன் நட்புக் கொண்டு அவர்­களை வீட்டை வீட்டு வெளியே அழைத்து வர தகுந்த பங்கா­ளி­களு­டன் இணைந்து செயல்­பட அர­சாங்கம் திட்­ட­மிடு ­வதாக அவர் தெரி­வித்­தார்.