தவணை முறையில் ராய் $150,000 கட்ட உத்தரவு

தவணை முறையில் ராய் $150,000 கட்ட உத்தரவு

2 mins read
2c0b41ad-4d03-4fda-adfb-7a3241bdc49f
-

வலைப்பதிவாளர் ராய் ஙெர்ங் (படம்) மீது பிரதமர் தொடுத்த அவதூறு வழக்கில் பிரதமருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையான $150,000ஐ ராய் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்படுவார் என்று ராய் ஙெர்ங்கின் வழக்கறிஞர் இயூஜின் துரைசிங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக, தான் செலுத்த வேண்டிய $150,000க்கு பதிலாக தாம் $36,000யும் அதனுடன் வழக்கு செலவினத் தொகையையும் சேர்த்துக் கட்டத் தயார் என்றும் அதை பிரதமர் ஏற்றுக் கொண்டு தம்மை இந்த வழக்கி லிருந்து விடுவித்து விடவேண்டும் என்றும் ராய் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால், இதை பிரதமர் நிரகரித்து விட்டதாக அவரது பத்திரிகை செயலாளர் கூறினார். "ராய் ஙெர்ங் தமது முழுக் கடன் தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் ஆனால், ராய் வழக்கின் செலவுத் தொகையை உடனடியாகச் செலுத்தும் பட்சத்தில் கடன் தொகையான $150,000ஐ தவணை முறையில் செலுத்த அவருக்கு தாம் போது மான அவகாசம் அளிக்கத் தயா ராக இருப்பதாகவும் பிரதமர் தெரி வித்துள்ளார். இதற்கு ராய் ஒப்புதல் தெரி வித்துள்ளார். அது நீதிமன்ற ஆவணத்தில் பதிவு செய்யப்பட் டுள்ளது," என்று பிரதமரின் பத்திரிகை செயலாளரான செல்வி சாங் லி லின் விளக்கினார்.

ராய் ஙெர்ங் இந்தத் தொகையை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியி லிருந்து மாதந்தோறும் $100யாக செலுத்துவார் என்று அவருக்கு இலவச சட்ட உதவி வழங்கும் திரு துரைசிங்கம் கூறியுள்ளார். இந்த ஏற்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி 2021ஆம் ஆண்டு வரை, தொடரும் என்றும் அதன் பின் தவணைத் தொகை மாதந்தோறும் $1,000ஆக உயர்ந்து இழப்பீட்டு தொகை முழுவதும் செலுத்தி முடியும்வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின்படி, ராய் தான் கொடுக்க வேண்டிய இழப் பீடு தொகையை 2033 ஆண்டிற் குள் கட்டி முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.