எதிர்பார்த்ததற்கு மாறாக, இவ்வாண்டு ஜனவரியில் சில்லறை விற்பனை சற்று ஏற்றம் கண்டது. கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்புநோக்க, 2016 ஜனவரியில் மோட்டார் வாகனங்கள் தவிர்த்த சில்லறை விற்பனை 1.4% கூடியது. புளூம்பெர்க் நடத்திய கருத்தாய்வில் சில்லறை விற்பனை 3.8% சரியும் என எதிர் பார்ப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டு அடிப்படையில் ஒப்புநோக்க, ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 7.5% உயர்வு கண்டது. வாகன விற்பனை 50.9% அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என புள்ளியியல் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. முன்னதாக, இந்த உயர்வு 3.1% இருக்கும் என்று புளூம்பெர்க் முன்னுரைத்திருந்தது. இந்த ஜனவரியில் ஒட்டுமொத்த சில்லறை விற்பனையின் மதிப்பு $4.1 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜனவரியில் இது $3.8 பில்லியனாக இருந்தது.
சில்லறை விற்பனை ஏற்றம் கண்டது
1 mins read
-

