புக்கிட் பாஞ்சாங் காப்பிக்கடையில் தீ; யாருக்கும் காயம் இல்லை

புக்கிட் பாஞ்சாங் காப்பிக்கடையில் தீ; யாருக்கும் காயம் இல்லை

1 mins read
7096874f-2e2f-451d-a366-99af12456cd9
-

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் பங்கிட் ரோடு, புளோக் 257ல் உள்ள காப்பிக்கடையில் நேற்று காலை 10.30 மணியளவில் மூண்ட தீயால் பல குடியிருப் பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காப்பிக்கடையின் வலது புறத்தில் உள்ள சீன உணவுக் கடையில் தீ மூண்டது என்றும் அது விரைவாகக் கடை முழுவதும் பரவியது என்றும் ஒரு வெடிப்பு சத்தமும் கேட்டது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியிருந்தனர்.

தீ கடை முழுவதும் பரவியதாலும் நிறைய கரும்புகை வெளிப்பட்டதாலும் அனைத்துக் கடைக்காரர்களும் கிட்டத்தட்ட 100 பேரும் கடையைவிட்டு வெளியே ஒடினர் என்றும் அறியப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காப்பிக்கடைக்கு மேலே, புளோக்கின் இரண்டாம், மூன்றாம் மாடிகளில் உள்ள வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்கள் அனைவரையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வெளியேற்றினர்.

தீயில் காப்பிக்கடை முழுவதும் சேதமடைந்தது.