குப்பைகள் பற்றி தணிக்கை

1 mins read
70074d84-b690-436d-b097-b30145d9fbc5
-

வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளில் குப்பைகள் தொடர்பான ஒரு தணிக்கையை தேசிய சுற்றுப் புற வாரியம் மேற்கொள்ள இருக்கிறது. உணவு, பொட்டலக் குப்பைகளை மேலும் குறைக்க உதவும் வகையில் தகவல் சேகரிப்பதற்காக இந்தத் தணிக்கை இடம்பெறுகிறது.

இதற்காக, பலவகைப்பட்ட சுமார் 300 வீடுகளில் பிரைஸ் வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும். வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளைச் சேகரித்து, உணவு, பொட்டலம் என அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து வகைப்படுத்த வேண்டியது அந்நிறுவனத்தின் பொறுப்பு என்று வாரியம் தெரிவித்துள்ளது.