வடக்கு-கிழக்கு தடத்தில் ரயில் சேவை தாமதம்

வடக்கு-கிழக்கு தடத்தில் ரயில் சேவை தாமதம்

1 mins read
8dfbb08b-6e76-48e3-9c14-e6bbd02244d7
-

வடக்கு-கிழக்கு தடத்தில் ரயில் சேவை, சமிக்ஞை பிரச்சினை காரணமாக சிறிது தாமதமாகி மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்றுத் தெரிவித்தது. நேற்று மாலை 6.07 மணி அளவில் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் வடக்கு=கிழக்கு தடத் தில் ரயில் சேவை முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பிய தாகவும் அசௌகரியம் ஏற் பட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.

முன்னதாக மாலை 5.58 மணியளவில் வடக்கு=கிழக்கு தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் 20 நிமிட தாமதத்தை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று அது சொன்னது. ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் சமிக்ஞையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது என்று போக்கு வரத்து நிறுவனமான எஸ்எம் ஆர்டி குறிப்பிட்டது.