அறிவுத்திறன் குறைபாடு இயக்கப் பெருநடை

அறிவுத்திறன் குறைபாடு இயக்கப் பெருநடை

1 mins read
b50eb662-28e0-44c2-b32e-1e1b195dc20e
-

சிங்கப்பூர் அறிவுத்திறன் குறை பாடுள்ளோருக்கான அமைப்பு, உலக அறிவுத்திறன் குறைபாடு தினத்தைச் சமூகப் பெருநடை நிகழ்ச்சியுடன் நேற்று அனு சரித்தது. அந்தப் பெருநடை முதல் தடவையாக நடைபெற்றது. மார்கரட் டிரைவில் உள்ள சிங்கப்பூர் அறிவுத்திறன் குறை பாடு இயக்க அமைப்பின் இடங்களுக்கும் பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் இடைப்பட்ட புதிய நடைபாதையில் இத்தகைய குறைபாடு உள்ள வர்களுக்கு நடக்க பயிற்சி அளித்து அந்தப் பாதையை அவர்கள் தெரிந்து கொள்ளச் செய்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கம். புதிய வீடுகளுக்கு வழிவிடவேண்டிய நிலை இருந்ததன் காரணமாக, இந்த அமைப்பு அமைந்துள்ள பகுதியில் ஒரு சாலைப் பகுதி நிரந்தரமாக மூடப்பட்டது.

அறிவுத்திறன் குறைபாடுள்ள சிலர் இதனால் அதிக நேரம் நடந்து பேருந்துநிலையத்துக்குப் போகவேண்டிய நிலை இருந்தது. பெருநடையில் 40 சமூகத் தொண்டூழியர்களும் இந்த இயக்கத்தின் மூலம் பலன்பெறும் 40 பேரும் கலந்துகொண்டனர். அறிவுத்திறன் குறைபாடு உள்ளோருக்கு உதவ தாங்கள் தயார் என்பதைப் புலப்படுத்தும் வகையில் வண்ணக் கை, காலுறைகளை இவர்கள் அணிந்திருந்தனர்.

அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களோடு பெருநடையில் ஈடுபடும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா (நடுவில்). படம்: சாவ்பாவ்