தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலாளிகளுக்கு $1.9 பி. சம்பள வழங்கீடுகள்

1 mins read
a1cfa0ca-e14f-4adf-9df8-a3d151552cbe
-

இம்மாத இறுதிக்குள் சிங்கப் பூரில் 95,000க்கும் அதிகமான முதலாளிகள் 1.9 பில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள சம்பள இணை நிதித் திட்ட வழங்கீடு களைப் பெறுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலி ருந்து 70 விழுக்காட்டு நிதி சிறிய, நடுத்தர நிறுவனங்களைச் சென்றடையும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரி வித்தன. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவு செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் தாக்கல் செய்ததை அடுத்து இது தொடர்பான அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப் பிடுகையில் இவ்வாண்டில் கூடுதலாக 10,000 முதலாளி களுக்குச் சம்பள இணை நிதித் திட்ட வழங்கீடுகள் கிடைக்கும். சம்பள இணை நிதித் திட்டம், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்க நிதித் திட்டம் போன்ற வர்த்தகங் களுக்கான சிறப்பு வழங்கீடு களுக்காக இவ்வாண்டில் மொத்தம் 2.2 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும். மொத்த மாதச் சம்பளமாக 4,000 வெள்ளிக்கும் குறைவாகப் பெற்ற 73-0,000க்கும் அதிகமான சிங்கப்பூர் ஊழியர்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட சம்பள உயர்வுக்கு சம்பள இணை நிதித் திட்டத்தின் மூன்றாவது தொகுதி, 40 விழுக்காடு நிதியை முதலாளி களுக்கு வழங்கும். இந்தச் சலுகைக்குத் தகுதி பெறும் முதலாளிகளுக்கு இம் மாத இறுதிக்குள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.