பசுமை மரங்கள் உலாவில் 22 மரபுடைமை மரநிழல்சாலை

பசுமை மரங்கள் உலாவில் 22 மரபுடைமை மரநிழல்சாலை

2 mins read
f7fd1ca7-0342-48df-a748-17a7ee21b44c
-

'குடிமை வட்டார பசுமை மரங்கள் உலா' என்ற ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக மரபுடைமை மரங்கள் வளர்ந்துள்ள ஒரு வீதி நேற்று அறி முகப்பபடுத்தப்பட்டது. உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ் மண்ட் லீ, 22 மரங்களைக் கெண்ட கன்னாட் டிரைவ் வீதியை அந்த உலாவின் ஓர் அங்கமாகத் தொடங்கிவைத்தார். மரபுடைமை மரங்கள் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் ஒரே வரிசை யில் உள்ள ஆக அதிக மரங்கள் இவைதான். தேசிய பூங்காக் கழகம் நேற்று இதனைத் தெரிவித்தது. புதிய குடிமை மாவட்ட பசுமை மரங்கள் உலா பொதுமக்களுக்கு மே 1ஆம் தேதி தொடங்கும்.

இஸ்தானா முன் வாசலில் இருக்கும் ஊசிஇலை மரங்கள். சிங்கப்பூர் கலைகள் பள்ளி முகப்பில் இருக்கும் அங்சானா மரங்கள், தேசிய அரும்பொருளகத்துக்கு அருகே வளர்ந்துள்ள மரபுடைமை மரங்கள், செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்தின் உள்ளே அடர்ந்து இருக்கும் சாகாஸ் மரங்கள், மெர்லின் பூங்கா வாயிலில் உள்ள புளிய மரம், ராபிள்ஸ் லேண் டிங்கில் அடர்ந்துள்ள சிங்கப்பூர் வெண்மரங்கள் ஆகியவை முக் கிய அங்சங்களாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் இரண்டு மணிநேர உலா உண்டு. மரங்களைப் பற்றி விளக்கிச் சொல் லும் வழிகாட்டியின் சேவையும் இருக்கும் என்றது வாரியம்.

"புதிய மரங்களை வளர்த் தாலும் அந்தக் காலம் முதல் முதிர்ந்து இருந்து வரும் மரங் களைப் பாதுகாத்து அவற்றைப் பேணி வளர்த்து வர வேண்டியது கட்டாயமானது. "இத்தகைய மரங்கள் பல தலைமுறை சிங்கப்பூரர்களுக்கு நிழல் கொடுத்துள்ளன. உறை விடமாகவும் இருந்துள்ளன. பசுமைத் தோற்றத்தைத் தந்துள் ளன," என்றார் திரு லீ. மர புடைமை மரங்களைக் கொண்ட வீதி, இத்தகைய முக்கியமான பாரம்பரிய நில அடையாள தாவ ரங்களைப் பற்றி அறிய உதவு கின்றன என்றார் அவர்.