காணாமல்போன சிங்கப்பூர் பெண் நாடு திரும்பினார்

காணாமல்போன சிங்கப்பூர் பெண் நாடு திரும்பினார்

1 mins read
8d76f521-d1ae-48e6-a795-6cd07cf71e66
-

இவ்வாண்டின் தொடக்கத்தில் காணாமல் போனதாக குடும்பத் தினர் தெரிவித்ததால் பரபரப்பை ஏற்படுத்திய சிங்கப்பூரரான ஷெரில் யாப் லே லெங் தனது ருமேனிய காதலருடன் நாடு திரும்பியிருக்கிறார். கடந்த ஜனவரியில் 25 வயது செல்வி யாப், 18 வயது டோனி யாவைச் சந்திப்பதற்காக 61 வயது தாயார் ஃபூ லி கெங்குடன் திடீரென்று ருமேனியாவுக்கு சென்றுவிட்டார். இது பற்றி தகவல் அறியாத ஷெரிலின் தந்தை திரு யாப், தமது மகள், மனைவி குறித்து மிகவும் கவலையடைந்தார். ஆனால் அடுத்த சில நாட் களில் அவர்களைப் பற்றி விவரங் கள் தெரியவந்தது.

ருமேனியா தலைநகர் புக்கா ரெஸ்ட்டுக்கு 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்டு ரெஸ்ட்டி என்ற கிராமத்தில் டோனியாவுடனும் அவரது பெற் றோருடனும் இருப்பதாக மகளும் தாயாரும் கூறினர். தற்போது டோனியா, அவரது தாயார் ஆகியோருடன் செல்வி யாப் சிங்கப்பூர் வந்துள்ளார். ‌ஷின்மின் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், சிங்கப்பூர் வந்து இரண்டு வாரங்கள் ஆன தாக டோனியா தெரிவித் திருந்தார். மூன்று மாதங்கள் இங்கு இருக்கப் போவதாகவும் அவர் கூறினார். மார்ச் 12ஆம் தேதி டோனி யாவின் தாயார் ஃபேஸ்புக் பக்கத் தில் பதிவேற்றிய படத்தில் யாப் பும் அவரது தாயாரும் டோனி யாவும் அவரது தாயாரும் காணப் பட்டனர்.

(இடமிருந்து) காதலர் டோனியா, அவரது தாயார், சிங்கப்பூரரான ஷெரில் யாப், அவரது தாயார். படம்: டோனியா ஒரேலியா ஃபேஸ்புக்.