தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

28 பேர் காயம் அடைந்த சாலை விபத்து

1 mins read
39ced00e-cb25-404d-82d6-59eca2911544
-

மரினா கடற்கரை விரைவுச்சாலையில் (MCE ) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றையடுத்து 28 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். தனியார் பேருந்தும் கனரக வாகனம் ஒன்றும் விபத்தில் சிக்கின. பேருந்து ஓட்டுநரை வி-டுவிக்க வேண்டி இருந்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை தெரிவித்தது. விபத்தில் காயம் அடைந்த 28 பேரும் பல மருத்துவ மனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேக்கு செல்லும் திசையில் மரினா கோஸ்ட்டல் டிரைவுக்கு அப்பால் அந்த விரைவுச் சாலையின் ஐந்தாவது தடத்தில் மாலை சுமார் 6.00 மணிக்கு விபத்து நிழ்ந்ததாகவும் இரவு 9 மணிக்குத்தான் அந்தப் பகுதி வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் தெரியவந்தது.

விபத்து நிகழ்ந்த சுரங்கப்பாதை இடத்தில் அதிகாரிகள் புலன்விசாரணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்