துடிப்புடன் மூப்படைவதை ஊக்குவிக்க நூலகத்தின் புதிய சேவைகள்

1 mins read
1c06dbaa-5b93-4876-8aed-68026ec07c4f
-

மூத்த குடி­மக்­கள் துடிப்­பு­டன் மூப்­படை­வதை­யும் வாசிப்­பதை­யும் ஊக்­கு­விக்­கும் நோக்கில் 11 மூத்தோர் நட­வ­டிக்கை நிலை­யங்களில் காலாண்டு அடிப்­படை­யில் புதிய திட்­டங்களை அறி­ மு­கப்­படுத்­த­வுள்­ள­தாக நேற்று தேசிய நூலக வாரியம் அறி­வித்­தது. இந்த நிலை­யங்களுக்கு 2012ஆம் ஆண்டு முதல், மூத்­தோ­ருக்­கான வாசிக்­கும் இடத்தை அமைத்­தல், அதி­க­மான புத் ­த­கங்களை அவர்­கள் பயன்­படுத்த வழி­வ­குத்­தல் போன்ற நூலகச் சேவைகள், நட­வ­டிக்கை­கள் ஆகி­ய­வற்றை நூலக வாரியம் வழங்கி வரு­கிறது.

ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மூத்தோர் பய­னடை­வர் எனக் கரு­தப்­படும் தாமான் ஜூரோங்­கில் உள்ள தை ஹுவா குவான் சேவை நிலை­யத்­தில் இந்த அறி­விப்பு செய்­யப்­பட்­டது. நூலக வாரிய ஊழி­யர்­கள் நடத்­தக் ­கூ­டிய கலை, கைவினை, கதை சொல்­லு­தல் போன்ற நிகழ்ச்­சி­களை இந்தத் திட்டம் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கும். அத்­தகைய நட­வ­டிக்கை­கள் மூத்தோர் சுறு­சுறுப்­பு­டன் இருப்­ப­தற்­கும் செயல்­­ப­ட­வும் வழி ­வ­குக்­கும் என நூலக வாரியம் தெரி­வித்­தது. மூத்­தோ­ருக்­குப் பய­னுள்ள நட­வ­டிக்கை­களைக் கண் ட­றி­வதற்­கான ஆலோ­சனை நிகழ்ச்­சி­களும் நடத்­தப்­ப­டும்.