இருமல் மருந்தை 'போதையாக' விற்ற மருத்துவர்

இருமல் மருந்தை 'போதையாக' விற்ற மருத்துவர்

1 mins read
3540f7a6-a220-40ef-9bfd-1d9253672696
-

இருமல் மருந்­துக்கு அடிமை­யா­ன­வர்­களுக்கு அதைத் தொடர்ந்து வழங்­கி­வந்த பொது­ம­ருத்­து­வ­ரான டாக்டர் லியூ கெர்ட் சியன் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­று­வ­தி­லி­ருந்து 12 மாதங்களுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார். பிடோக்­கில் இருக்­கும் தெமாசெக் கிளினிக் & சர்­ஜ­ரி­யில் மருத்­து­வ­ரா­கப் பணி­பு­ரிந்த அவர் 30க்கும் மேற்­பட்­ட­வர்­களுக்கு இருமல் மருந்து போத்தல் ஒன்றின் விலை $22 என்ற ரீதியில் விற்றார். மருந்தை வாங்­கி­ய­வர்­களுக்கு மருந்­துச் சீட்டும் ரசீதும் வழங்க­வில்லை. மருத்­து­வ­ருக்கு $5,000 அப­ரா­த­ம் விதித்த சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அவரது செய்கைக்கு கண்டனம் தெரிவித்தது.