சுவா சூ காங்கில் நேற்று பிற்பகலில் பெய்த மழையில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு பேர் தங்கள் காரில் கொஞ்ச நேரம் சிக்கிக்கொண்டனர். சுவா சூ காங் அவென்யூ 2ல் இருக்கும் 296வது புளோக்குக்கு எதிரே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் மிதமான அல்லது கடும் மழை பெய்யக் கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னதாக எச்சரித்து இருந்தது. கீழே விழுந்த மரம் காரை முற்றிலும் மூடிவிட்டதை இங் சி யி என்ற பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் இணையத்தில் அனுப்பிய படம் காட்டியது. மரம் முழு தடத்தையும் அடைத்துவிட்டது. பேருந்து செல்ல முடியவில்லை என்று அந்த 23 வயது மாணவர் குறிப் பிட்டு இருந்தார்.
காரின் மீது மரம் விழுந்தது; வாகனத்தில் இருவர் சிக்கினர்
1 mins read
-