அனைத்துலகப் பள்ளிகளில் 79% வெளிநாட்டு மாணவர்கள்

அனைத்துலகப் பள்ளிகளில் 79% வெளிநாட்டு மாணவர்கள்

1 mins read
724cb379-1262-4404-a732-ab667c1d7da0
-

சிங்கப்பூரில் உள்ள அனைத்துலகப் பள்ளிகளில் 46,500 மாணவர்கள் பயின்று வருவதாகவும் அவர்களில் 79 விழுக் காட்டினர், அதாவது 36,900 மாணவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சிற்கான நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் தெரிவித்து உள்ளார். மற்ற மாணவர்களில் 5 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள்; 16 விழுக்காட்டினர் நிரந்தரவாசிகள். இது இவ்வாண்டின் ஜனவரி மாத நிலவரம்

குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள அனைத்துலக நிர்வாகிகளின் பிள்ளைகளுக்குக் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் இந்தப் பள்ளிகள், அனைத்துலக நிறுவனங்கள் முதலீடு செய்யும் இடமாக, கவர்ச்சிகரமான செயல்பாட்டுத் தளமாக சிங்கப்பூரை நீடிக்கச் செய்யத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று திருவாட்டி லோ கூறினார்.