கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்தம் 122,500 பொறியாளர்கள் பணியாற்றுவதாகவும் அவர்களில் பத்தில் ஆறு பேர் சிங்கப்பூரர்கள் என்றும் மனிதவள துணை அமைச்சர் டியோ செர் லக் தெரிவித்தார். சிங்கப்பூரில் மொத்தம் எத்தனை பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் அவர்களில் எத்தனை பேர் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டவர்கள் என்றும் டாக்டர் லீ பீ வா நாடாளுமன்றத்தில் நேற்றுக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் டியோ, "நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த, தயாரிப்பு, தொலைத் தொடர்பு போன்ற முக்கிய துறைகள் வளர்ச்சியை எட்ட, அறிவார்ந்த தேசம் எனும் நமது இலக்கை முடுக்கிவிட என சிங்கப்பூரில் பொறியாளர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர்," என்று கூறினார்.
பொறியாளர்களில் பத்தில் அறுவர் சிங்கப்பூரர்கள்
1 mins read
-

