ஈஸ்வரன்: தொழிற்துறை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு மேலும் ஆழமான பங்காளித்துவம் தேவை

ஈஸ்வரன்: தொழிற்துறை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு மேலும் ஆழமான பங்காளித்துவம் தேவை

1 mins read
da6cd985-36ce-4976-a01b-7b9ec0aa9f8c
-

தொழிற்துறை மறுசீரமைப்புத் திட்டத்தில் அரசின் அணுகுமுறை வர்த்தகத் தொழில் துறை மேம்பாட்டில் அரசு தற்போது காட்டும் அணுகுமுறையைவிட மாறுபட்டது என்றும் அதற்குப் பெரிய, சிறிய நிறுவனங்கள், பொது ஆய்வுக் கழகங்கள், வர்த்தக சபைகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற் றுடன் மேலும் ஆழமான பங்காளித் துவம் தேவைப்படுகிறது என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் (படம்) கூறினார். தொழிற்துறை, மறுசீரமைப்புத் திட்டம் பங்குதாரர்களையும் வளங் களையும் ஒருங்கிணைக்கும் என்றும் இதனால் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டுக்குத் துடிப்புடன் கவனம் செலுத்தி ஆதரவு வழங்குவதுடன் அவை எதிர் நோக்கும் மாறுபட்ட சவால்களைச் சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வர்த்தக தொழில் அமைச்சின் வரவு செலவு விவாதத்தின்போது இதனைத் தெரிவித்தார் அமைச்சர் ஈஸ்வரன். வரவு செலவு உரையில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்த $4.5 பில்லியன் தொழிற்துறை மறுசீரமைப்புத் திட்டத்தில் தானியக்க ஆதரவுத் தொகுப்புத் திட்டமும் அடங்கும். இது அடுத்த மூன்று ஆண்டு களில் 300க்கும் மேற்பட்ட தானி யக்க திட்டங்களுக்கு $400 மில்லியனை வழங்கும். இத்திட்டத்தின் வழி தங்கள் தொழில் முறைகளைத் தானியக்க இயந்திரங்கள் மூலம் மேம்படுத்த விழையும் நிறுவனங்களுக்கு $1 மில்லியன் வரை அரசு மானியம் கிடைக்கும் என்பதை அமைச்சர் ஈஸ்வரன் விளக்கினார்.