நடைபாதையில் சைக்கிள், மின் ஸ்கூட்டர் ஓட்ட விரைவில் சட்டபூர்வ அனுமதி

நடைபாதையில் சைக்கிள், மின் ஸ்கூட்டர் ஓட்ட விரைவில் சட்டபூர்வ அனுமதி

1 mins read
b2d58f44-fbfc-4008-9c4d-78c4310fcf60
-

இவ்வாண்டின் இறுதிக்குள் நடை பாதையிலும் சைக்கிள் அல்லது மின் ஸ்கூட்டரை ஓட்ட முடியும். இதனை சட்டபூர்வமாக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இதன் தொடர்பில் நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இந்த விவரங்களை வெளியிட்டுப் பேசிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ, "பயணிகளுக்கான வசதி களை எளிமையாக்கும் முயற்சி களின் ஓர் அங்கமாக இது இடம் பெறுகிறது," என்றார். போக்குவரத்து அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத் தின்போது அவர் பேசினார். இது, கார்களை நம்பியிருப் பதைக் குறைக்கும் முக்கிய உத்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் நகரும் சாதனங் களின் பயன்பாட்டை நிர்வகிப்பது தொடர்பில் கடந்த மாதம் துடிப்பு மிக்க நடமாட்டத்திற்கான ஆலோ சனைக் குழு, புதிய பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை வெளியிட் டது. அதில் சைக்கிள் தவிர இதர நகரும் சாதனங்களையும் நடை பாதைகளில் அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மின் ஆற்றல் உதவி யோடு இயங்கும் சைக்கிள்களில் சட்டவிரோத மாற்றங்களைத் தடுப் பதற்காக பதிவு செய்யும் முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தெம்பனிசில் உள்ள இதுபோன்ற நடைபாதையில்தான் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கப்படவிருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்