நிதித்துறைப் புத்தாக்கத்தில் புதிய மையமாகத் திகழ சிங்கப்பூர் விழைகிறது என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார். வாடிக்கையாளர்களுக்கு உத வும் வழிகளில் முக்கியமான முன் னோடியாகத் திகழ்வது சிங்கப் பூரின் நோக்கம் என்றார் அவர். அமெரிக்கா சென்றுள்ள திரு தர்மன், நியூயார்க்கில் ஆசியச் சங்கத்தில் சிங்கப்பூர் நிதித்துறை தொழில்நுட்ப விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். இந்த விழா சிங்கப்பூரில் வரும் நவம்பரில் ஐந்து நாட்கள் நடக்கும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
தர்மன்: நிதித்துறை புத்தாக்க மையமாக சிங்கப்பூர் நாட்டம்
1 mins read

