ரயில், பேருந்துகளில் 'நெட்ஸ் ஃபிளாஷ்பே' பயன்படுத்தினால் வெகுமதி

1 mins read
6ed16fac-5a20-45d7-a9a2-7e693ce6fda6
-

ரயில், பேருந்து பயணத்தின்போது 'நெட்ஸ் ஃபிளாஷ்பே' அட்டையைப் பயன்படுத்துவோருக்கு வெகுமதி வழங்கும் இயக்கத்தை 'நெட்ஸ்' நேற்று அறிமுகப்படுத்தியது. டிரான்சிட்லிங்க் டிக்கெட் அலுவலகங்களிலும் எம்ஆர்டி ரயில் நிலைய வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட அளவே உள்ள 'எங்கிரி பர்ட் மூவி ஃப்ளாஷ்பே' அட்டைகளும் இந்த இயக்கத்தில் அடங்கும் என நெட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எம்ஆர்டி நிலையங்களில் உள்ள மதிப்புக் கூட்டு டிக்கெட் சாதனங்களில் ஒரு வெள்ளி கழிவை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஏப்ரல் 15 முதல் செப்டம்பர் 30 வரை 'ஃப்ளாஷ்பே' பயன்படுத்துபவர்கள், வாராந்திர அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்கலாம். இதில், வெற்றி பெறும் 250 பயணிகள் தலா 38 வெள்ளி கழிவு பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்க பயணிகள் தங்களது அட்டையின் 16 இலக்க எண்ணை 'நெட்ஸ்' இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.